நடிகை ஓவியாவுக்கு இளைஞர் ஒருவர் முத்தம் தரும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஓவியா, நடிகர் ஆரவ்வை காதலித்து வந்தார். இவர்களிடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். பிறகு, மற்றொருவரை காதலிப்பதாக ஓவியா கூறினார். இந்த காதலும் முறிந்தது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புதிதாக ஒரு வீடியோவை ஓவியா வெளியிட்டு இருக்கிறார். அதில், ஓவியா சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். அவருக்கு, இளைஞர் ஒருவர் முத்தம் தருகிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஓவியாவிற்கு முத்தம் கொடுக்கும் இளைஞர் யார் என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஓவியாவின் புதிய காதலர் இவர்தான் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தற்போது, கைவசம் படங்கள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார் ஓவியா. சமீபத்தில் நண்பர்களுக்கு அவர் பார்ட்டி கொடுத்திருக்கிறார். அப்போது எடுத்த வீடியோதான் இது என அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.
newstm.in