கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான லவ் டுடே படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக பிரதீப் ரங்க நாதனே நடித்திருப்பார்.
இதில் செல்போனை காதலர்கள் இருவரும் மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தான் காண்பிக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், சேலம் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
தனக்கு திருமணமாகவுள்ள பெண்ணுடன் அவர் தனது செல்போனை மாற்றியுள்ளார். அப்போது, வருங்கால கணவரின் செல்போனை ஆராய்ந்த அந்தப் பெண்ணுக்கு ஒரு சிறுமியின் அரை நிர்வாண வீடியோ இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஏற்பட்டது.
இதை தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் திருமணத்தை நிறுத்தி உள்ளனர். ஏற்கனவே காதலிப்பதாக அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒரு சிறுமியை ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் .