வார ராசிபலனும் பரிகாரமும்| Weekly horoscope and remedy

வெள்ளி முதல் வியாழன் வரை (20.01.2023 – 26.01.2023 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்

சூரியன், சந்திரன் நன்மை வழங்குவர். சூரியவழிபாடு நன்மை அளிக்கும்.

அசுவினி: கடந்த வார சங்கடம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நன்மையில் முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

பரணி: தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அரசு வழியில் நன்மைகளை அதிகரிப்பார். திங்கள் முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதனால் எதிர்பார்ப்பு நிறைவேறத் தொடங்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: சந்திர பலத்தினால் சாதனை புரிவீர், நட்சத்திர நாதன் கேந்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். சென்றவாரம் நினைத்த செயல் நிறைவேறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

ரிஷபம்

கேது, புதன், சுக்கிரன் நன்மை வழங்குவர். மகாலட்சுமியை வழிபடுங்கள்.

கார்த்திகை 2, 3, 4: ஞாயிறு முதல் உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய முயற்சி பலிக்கும். ஒரு சிலருக்கு இடம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

ரோகிணி: உங்கள் செயல் இழுபறியாகும். எதிர்பாராத சங்கடம் தோன்றும். அதன்பின் நீங்கள் நினைப்பது நிறைவேறும். முயற்சிக்கு ஏற்ப வியாபாரத்தில் லாபம் அடைவீர்.

மிருகசீரிடம் 1, 2: உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டானாலும் அதன்பின் எதிர்பார்ப்பு நிறைவேறத் தொடங்கும்.

சந்திராஷ்டமம்

19.1.2023 காலை 11:53 மணி – 21.1.2023 மதியம் 2:30 மணி

மிதுனம்

ராகு, சுக்கிரன், நன்மைகளை வழங்குவர். சனீஸ்வர பகவானை வழிபட வளம் கூடும்.

மிருகசீரிடம் 3, 4: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். திங்கள் மாலை வரை செயல்களில் கவனம் தேவை.

திருவாதிரை: லாப ஸ்தான ராகுவால் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தை நவீன மயம் செய்வீர்கள். முயற்சி பலிதமாகும்.

புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். வேலை இல்லாமல் இருந்தவருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

சந்திராஷ்டமம்

21.1.2023 மதியம் 2:31 மணி – 23.1.2023 மாலை 4:52 மணி

கடகம்

புதன், குரு, செவ்வாய் நன்மை வழங்குவர். நவகிரக வழிபாடு நன்மை தரும்.

புனர்பூசம் 4: ராசிநாதன் திங்கள் மாலை வரை நற்பலன்களை வழங்குவார் என்பதால் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலைமை சீராகும்.

பூசம்: லாப செவ்வாயால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நான்காமிட கேதுவும், ஏழாமிட சூரிய, சனியும் உடல் நிலையில் சில சங்கடங்களை உண்டாக்குவர்.

ஆயில்யம்: பாக்கிய குருவும், லாப செவ்வாயும் நன்மைகளை அதிகரிப்பர். புதன் உங்கள் ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

சந்திராஷ்டமம்

23.1.2023 மாலை 4:53 மண – 25.1.2023 இரவு 7:53 மணி

சிம்மம்

கேது, சனி, சூரியன் நன்மை வழங்குவர். விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

latest tamil news

மகம்: பெரும்பாலான கிரகம் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் எண்ணம் எளிதில் நிறைவேறும். எதிர்பார்ப்பு பலிக்கும். வியாழன் அன்று செயல்களில் கவனம் தேவை.

பூரம்: மூன்றாமிட கேதுவால் உங்கள் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராசி நாதனால் எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் ஏற்படும். அரசு வழியிலான முயற்சியில் பலன் கிடைக்கும்.

உத்திரம் 1: ஆறாமிட சூரியன், சனியால் தொழிலில் லாபம் ஏற்படும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். பொருளாதார நிலை உயரும்.

சந்திராஷ்டமம்

25.1.2023 இரவு 7:54 மணி – 28.1.2023 நள்ளிரவு 12:24 மணி

கன்னி

சுக்கிரன், புதன், குரு, சந்திரன் நன்மைகளை வழங்குவர். திருச்செந்துார் முருகனை வழிபட வளம் உண்டாகும்

உத்திரம் 2, 3, 4: உங்கள் ராசிக்கு லாபாதிபதியான சந்திரன் வாரம் முழுவதும் நன்மைகளை வழங்குவார். உங்கள் குடும்பாதிபதியும் பாக்கியாதிபதியுமான சுக்கிரன் திங்கள் வரை உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்.

அஸ்தம்: சந்திர பலத்தால் உங்கள் நிலை உயரும். குரு பார்வையால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். ஒருசிலர் புதிய இடம் வாங்குவீர். வரவு அதிகரிக்கும்.

சித்திரை 1, 2: குடும்பத்திற்காக கடுமையாக உழைத்தாலும் இரண்டாமிட கேதுவால் நல்ல பெயர் வாங்க முடியாது. வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் செல்வாக்கு உயரும்.

துலாம்

சுக்கிரன், சந்திரன் நன்மை வழங்குவர். அனுமனை வழிபட அல்லல் தீரும்.

சித்திரை 3, 4: பெரும்பாலான கிரகம் எதிர்மறையான பலன்களை வழங்கி வரும் நிலையில், உங்கள் ராசிநாதனும், ஜீவன ஸ்தானாதிபதி சந்திரனும் நன்மைகளை வழங்குவார். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

சுவாதி: வேலை வாய்ப்பிற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். பண வரவில் உங்கள் கவனம் செல்லும். வியாபாரத்தில் லாபம் கூடும்.

விசாகம் 1, 2, 3: மனக்காரகனும் உங்கள் ஜீவன ஸ்தானாதிபதியுமான சந்திரனின் சஞ்சாரங்களினால் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் விருத்தி அடையும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி நிறைவேறும்.

விருச்சிகம்

சனி, குரு, ராகு, சுக்கிரன், புதன் நன்மை வழங்குவர். மகாலிங்கேஸ்வரரை நினைத்து வழிபட சங்கடம் குறையும்.

விசாகம் 4: பெரும்பாலான கிரகம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட முயற்சிகளில் வெற்றி காண்பீர்.

அனுஷம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். வாரம் இது. குடும்ப நலனில் அக்கறை செல்லும். வியாபாரம் சிறக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். எதிரியின் தொல்லை விலகும்.

கேட்டை: ஐந்தாமிட குருவால் செயல்களில் லாபம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு ஏற்படும். வருமானத்திற்குரிய செயலில் கவனம் செலுத்துவீர்கள்.பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

கேது, சுக்கிரன், செவ்வாய் நன்மையை வழங்குவர். ஆலங்குடி குரு பகவானை மனதில் எண்ணி வழிபடுங்கள். வாழ்வில் வசந்தம் வீசும்.

மூலம்: மனதில் குழப்பமும் செயலில் தடையும் ஏற்படும். அதன்பின் சிந்தித்து செயல்பட்டு வெற்றி காண்பீர். முயற்சியில் லாபம் உண்டாகும். நல்ல முடிவு எடுப்பீர்கள்.

பூராடம்: சனிக்கிழமை மாலை வரை முயற்சி தள்ளி போகும். ஞாயிறு முதல் பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தேவைகள் நிறைவேறும்.

உத்திராடம் 1: வாரத்தில் முதல் இரண்டு நாட்கள் சுமார். இருந்தாலும் வரவேண்டிய பணம் வந்து சேரும். முயற்சியில் முன்னேற்றமும், குடும்ப வழியில் நன்மைகளும் ஏற்படும். பூர்வீக சொத்துகளில் உண்டான பிரச்னை விலகும்.

மகரம்

சுக்கிரன் நன்மையை வழங்குவார். மகிழ்ச்சி அதிகரிக்க காளத்தீஸ்வரரை மனதில் எண்ணி வழிபாடு செய்யுங்கள்.

உத்திராடம் 2, 3, 4: தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை. குழப்பங்களுக்கு ஆளாவீர்கள். அதன்பின் செயல்களில் தெளிவு உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

திருவோணம்: ஜென்ம சனியின் காரணமாக கடுமையான உழைப்பு உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை. உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

அவிட்டம் 1, 2: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் முயற்சிகளில் தடையும் வீண் செலவும் ஏற்படும். வரவில் தடை உண்டாகும். அதன்பின் முயற்சிகள் லாபமாகும்.

கும்பம்

குரு, ராகு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். நரசிம்மர் வழிபாட்டால் நன்மைகள் பல வந்து சேரும்.

அவிட்டம் 3, 4: எதிர்பார்த்த பணம் வரும். அரசு வகையிலான முயற்சி நன்மையில் முடியும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.

சதயம்: திட்டமிட்ட செயல்களில் லாபம் அடைவீர். செயலில் முன்னேற்றம் உண்டாகும். நினைத்தபடியே செயல்களை செய்து முடிக்கும் சூழல் உருவாகும். அலைச்சல் அதிகரிக்கும். செலவு ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

பூரட்டாதி 1, 2, 3: இழுபறியாக இருந்த முயற்சி ஒவ்வொன்றாக நிறைவேறும். ஒரு சிலருக்கு வெளியூரில் தங்கும் நிலை உண்டாகும். அரசு பணியாளர்களின் எண்ணம் நிறைவேறும்.

மீனம்

செவ்வாய், சனி, சூரியன், சுக்கிரன், புதன் நன்மையை வழங்குவர். வராகியை மனதில் எண்ணி வழிபடுங்கள்.

பூரட்டாதி 4: கடந்த வாரம் ஏற்பட்ட சங்கடம் விலகும். பெரும்பாலான கிரகம் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். அதனால் எதிர்பார்ப்பு நிறைவேறும். நிதி நிலை உயரும்.

உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஆரோக்யமான சூழல் உருவாகும். தவிர்க்க முடியாத செலவு ஏற்படும். வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பேசுவதில் கவனம் தேவை. சிறு சங்கடம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ரேவதி: அனுபவ அறிவால் முயற்சியில் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் ஒரு நேரம் இருப்பது போல் மறு நேரம் சந்தோஷம் இருக்காது. வெளி இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.