ஸ்ருதிஹாசனுக்கு சாதனையாளர் விருது

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஒரு நடிகையாக மட்டுமல்ல பாடகியாக, இசை அமைப்பாளராக, சமூக சேவகியாக பல்வேறு முகங்களை கொண்டவர் சமீபத்தில் இவர் நடித்த வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்ருதிஹாசனுக்கு டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பவர் காரிடார்ஸ் (பிசி) இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த விருதை வழங்கினார். இது பல்வேறு களங்களில் இருந்து தேசத்திற்கு சேவை செய்ய முன்வந்த குடிமக்களின் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து வழங்கப்படும் விருதாகும்.

விருது பெற்றது குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது “இந்த விருதைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதற்காக நான் நடுவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கலைப் பணிக்காக பாராட்டப்படுவது எப்போதுமே பணிவானது. முக்கியமான விஷயங்களுக்கு எனது தளத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.