பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பாத மனைவி; ஆத்திரத்தில் அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட கணவன்!

மனைவி பெற்றோர் வீட்டில் நீண்ட காலம் தங்கியதால் ஆத்திரத்தில், தன்னுடைய அந்தரங்க உறுப்பை கணவர் வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

Marriage – Representational Image

பீகார் மாநிலம், மாதேபுரா காவல் நிலைய பகுதிக்குட்பட்ட ரஜனி நயநகர் பகுதியில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 வயதான கிருஷ்ணா பாசுகி என்பவர், மலோத் வார்டில் வசிக்கும் அனிதா என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.

தகவலின்படி, கிருஷ்ணா பஞ்சாப் மண்டியில் தங்கி வேலை செய்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ரஜனி நயநகர் பகுதியில் உள்ள தன்னுடைய குடும்பத்தை காணச் சென்றுள்ளார். அவரின் மனைவி அனிதா அங்கில்லை. தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்று நீண்ட காலமாக அங்கேயே தங்கி இருக்கிறார். அங்கிருந்து திரும்புவதற்குக் காலம் தாழ்த்தி உள்ளார்.

treatment

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, கோபத்தில் கூரான ஆயுதத்தைக் கொண்டு தன்னுடைய அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை உறவினர்கள் மீட்டு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், கிருஷ்ணா மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.