நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த கே.எல்.ராகுல் – ஐபிஎல் போட்டிக்குப் பிறகுதான் வரவேற்பு?

தனது நீண்டநாள் காதலியான பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை, இந்திய அணி கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் இன்று மாலை திருமணம் செய்துகொண்ட நிலையில், முதன்முதலாக திருமணப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகையும், மூத்த நடிகர் சுனில் ஷெட்டியின் மகளுமான அதியா ஷெட்டியும், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பரும், துணைக் கேப்டனுமான கே.எல்.ராகுலும், கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இன்று மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை பங்களாவில் மிகப் பிரம்மாண்டாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இன்று மாலை சுமார் 4 மணியளவில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்தப் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி வைரலாகி வரும்நிலையில், திருமணம் முடிந்ததும், அதியா ஷெட்டியின் தந்தை சுனில் ஷெட்டியும், சகோதரர் ஆஹான் ஷெட்டியும் பங்காளவிற்கு வெளியே எல்லாருக்கும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிக் காட்டி வந்தனர்.

image

image

அப்போது செய்தியாளர்கள், கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி தம்பதியின் வரவேற்பு நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்று நடிகர் சுனில் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 16வது சீசன் ஐபிஎல் போட்டிக்குப் பிறகுதான் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “மிகவும் அழகாக, அதேசமயத்தில் நெருங்கிய உறவினர்கள் சிலர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திருமணம் முடிந்துள்ளது. திருமணச் சடங்குள் எல்லாம் முடிந்து, இப்போது மாமனார் ஆகியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

image

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.