ஒரு சோகம் முடிவதற்குள் மற்றொன்று.. உயிரை மாய்த்துக் கொண்ட மற்றொரு சினிமா நட்சத்திரம்!

சினிமா நட்சத்திரங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் நிகழ்கின்றன. சில நேரங்களில் அவர்களது மரணங்கள் திரையுலகையே கலங்க வைத்து விடுகிறது. சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 20. இவர் சல்மான் கானுடன் தபாங் 3, கஹானி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ‘அலி பாபா தஸ்தான் இ காபூல்’ எனும் டிவி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது சிகை அலங்காரத்திற்காக அறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. படப்பிடிப்புக்கு நேரமாகிக்கொண்டிருந்த நிலையில், அவர் இருந்த அறைக்கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த சோகம் மறைவதற்குள்ளாக மீண்டும் ஒரு நடிகர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர், சுதிர் வர்மா, இவர் செகண்ட் ஹேண்ட், குண்டனபு பொம்மா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

முதற்கட்ட தகவலின்படி இவர் சொந்த காரணங்களுக்காக விசாகப்பட்டினத்தில் இருக்கும் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டாதாக தகவல் வெளியாகியுள்ளது.

image
இவரின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். இளம் நடிகர் சுதிர் வர்மா தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை துன்பத்திற்கான தீர்வு இல்லை என்று பலரும் சொல்லி வந்தாலும், தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.