உள்ளே, வெளியே… டெல்லி நில அதிர்வை வச்சு செஞ்ச நெட்டிசன்கள்… தெறிக்கும் மீம்ஸ் மழை!

டெல்லியின் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகல் வலுவான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த மக்கள் உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இது நேபாளத்தில் பிற்பகல் 2.28 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் நிலநடுக்கம்

நில நடுக்கம் ஏற்பட்ட இடம் உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகரில் இருந்து 148 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேபாள நாட்டின் பகுதி எனக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்கள் ட்விட்டர் வலைதளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. இருப்பினும் நில அதிர்வின் பாதிப்புகள், அதன் தாக்கம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு

கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி, என்.சி.ஆர் மற்றும் வட இந்திய மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. அப்போது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவானது. இது உத்தரகாண்ட் மாநிலம் ஜோசிமத்தில் இருந்து தென்கிழக்கு 212 கிலோமீட்டர் தூரத்தில் நேபாளத்தில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழக்கம் போல் நிலநடுக்கம் ஏற்பட்டது உண்மைதானா? என ஒரு கூட்டம் ட்விட்டரில் வந்து தீவிரமாக தேடி வருகிறது.

தெறிக்கும் மீம்ஸ்கள்

அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் சரமாரியாக ட்வீட்களை அள்ளி வீசி வருகின்றனர். அதில் பல மீம்ஸ்கள் ரசிக்கும் படியாக அமைந்துள்ளன. ட்விட்டரில் விஷயத்தை கன்பார்ம் செய்ய ஓடி வருபவர்களுக்கு ஸ்பெஷல் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர். ரயிலில் எஞ்சின் மற்றும் ரயிலின் மேற்புறம் என தொங்கி கொண்டு மக்கள் பயணிக்கின்றனர்.

காற்று மாசு ஒருபக்கம், நிலநடுக்கம் மறுபக்கம்

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்படியான காட்சிகளை பார்க்கலாம். அதை வைத்து வரிசை கட்டி வந்த ட்விட்டர்வாசிகள் என குறிப்பிட்டுள்ளனர். ஒரு போட்டோவில் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக மக்கள் வீடுகளுக்கு வேகமாக ஓடிச் சென்று தங்களை பாதுகாத்து கொள்கின்றனர்.

வெளியே ஓடிவந்த மக்கள்

அடுத்த போட்டோவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மீண்டும் தங்களை காத்து கொள்ள தெருவிற்கு ஓடி வருவது போல் காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் அலுவலக நேரத்தில் ஓய்வே கிடைப்பதில்லை. இந்த நில அதிர்வு வந்து கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டது. கொஞ்சம் தம், கொஞ்சம் டீ என சாலையோரம் மக்கள் நின்று கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

இந்த டெல்லி, என்.சி.ஆருக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோதனை? 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை ஆட்டம் காட்டி விடுகிறது எனக் குறிப்பிட்டு மோனாலிசா ஓவியம் களைந்து கிடப்பதை போல பதிவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.