சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதை தடுப்பதற்காக ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவில் இருந்து வந்த ரயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவரது பைய்யை சோதனை செய்ததில் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஒடிசாவை சேர்ந்த ராபி நாயக் என்பதும், ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கொஞ்சம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ராபி நாயக்கை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.