மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு நபர் மூளைச்சாவு அடைந்துள்ளார். அவரது இதயத்தை சென்னையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மரணம் அடைந்தவரின் இதயத்தை உடனே அறுவை சிகிச்சை செய்து எடுத்து அதை பாதுகாப்பான முறையில் விமானத்தின் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அங்கிருந்து காவல்துறையினரின் உதவியுடன் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனைக்கு கிரீன் காரிடார் மூலமாக சரியாக இரண்டு மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்று உரிய நபருக்கு பொருத்தும் ஏற்பாடுகள் நடந்தன.