Sudheer Varma Suicide: இளம் நடிகர் தற்கொலை: போகும் வயதா இது என பிரபலங்கள் வேதனை

சுதீர் வர்மாவின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினரோ, போகும் வயதா இது, ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுதீர் வர்மாதெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் சுதீர் வர்மா. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். Kundanapu Bomma, செகண்ட் ஹேன்ட் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். Shoot Out At Alair என்கிற வெப்தொடரிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் இருக்கும் தன் வீட்டில் ஜனவரி 23ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 33.
சுதாகர்சுதீர் வர்மா இறந்த தகவலை Kundanapu Bomma படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த சுதாகர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். தங்கள் பட விழாவில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சுதாகர் கூறியிருப்பதாவது, சுதீர் மிகவும் அன்பானவர். உங்களை தெரிந்து கொண்டதும், சேர்ந்து வேலை செய்ததும் சிறப்பு பிரதர். நீங்கள் உயிருடன் இல்லை என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.

ஏன்?
வெங்கிசுதாகரை அடுத்து இயக்குநர் வெங்கி குடுமுலாவும் சுதீர் வர்மாவின் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார். வெங்கி கூறியிருப்பதாவது, சில சமயங்களில் ஸ்வீட்டான புன்னகைக்கு பின்னால் ஆழமான வேதனை மறைந்துவிடுகிறது. அடுத்தவருக்கு என்ன நடக்கிறது என்பது தெரிவது இல்லை. அதனால் தயவு செய்து அன்பை பரப்பவும். மிஸ் யூ சுதீர். நீங்கள் இப்படி செய்திருக்கக் கூடாது. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.

மிஸ் யூ
ரசிகர்கள்சுதீர் வர்மாவின் மரணம் குறித்து அறிந்த சினிமா ரசிகர்கள் கூறியிருப்பதாவது, செகண்ட் ஹேன்ட் பட ஹீரோ தானே இவர். மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. பாவம், அவருக்கு இப்படி ஒரு முடிவா வர வேண்டும். எந்த பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது சுதீர். அவசரப்பட்டுவிட்டீர்களே. உங்களின் கஷ்டத்தை நெருக்கமானவர்களிடம் கூட சொல்லாமல் மறைத்துவிட்டீர்களே என கூறியுள்ளனர்.

பிரச்சனைசொந்த பிரச்சனை காரணமாக சுதீர் வர்மா கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்காமல் அல்லாடி வந்தார் சுதீர் வர்மா என அவரின் குடும்பத்து செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சுதீர் வர்மாவின் இறுதிச்சடங்கு விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் என தகவல் வெளியாகியிருக்கிறது. திரையுலகை சேர்ந்தவர்கள் பட வாய்ப்பு கிடைக்காமல் மன வேதனை அடைந்து இறுதியில் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. சினிமா இல்லை என்றால் வேறு ஏதாவது வேலை பார்க்கலாமே. இப்படி ஒரு முடிவை யாரும் எடுக்க வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.