ஓலா S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வீல் உடைந்ததால் பெண் படுகாயம்! மீண்டும் ஒரு OLA EV விபத்து!

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விபத்து என்பது அதிகரித்துவருகிறது. அதுவும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை அதிகரித்த தொடக்க காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீவிபத்து, கோளாறு போன்றவை அடிக்கடி தொடர்ச்சியாக ஏற்பட்டு பலர் உயிர் இழந்துள்ளார்கள்.

சமீபத்தில் பார்மர் என்ற நபர் அவரின் ஓலா ஸ்கூட்டரை ஓட்டி சென்ற மனைவிக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் மனைவி தற்போது அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறியுள்ளார்.

ஓலா S1 மற்றும் S1 Pro ஆகிய ஸ்கூட்டர்களில் முன்பக்கம் சிங்கள் சஸ்பென்ஸன் வசதி உள்ளது. இதன் விலை குறைந்த ஓலா S1 Air சராசரி டெலிகோபிக் போர்க் மற்றும் டூயல் ஷாக் வசதி உள்ளது. அந்த பெண் ஓட்டி சென்ற சமயம் திடீரென்று முன்பக்க சஸ்பென்ஸன் உடைந்து டயர் தனியாக சென்றது. இதனால் அந்த பெண் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இதேபோன்று ஓலா ஸ்கூட்டரின் சஸ்பென்ஸன் உடைந்து விபத்து ஏற்பட்டது. தற்போது அதேபோன்ற ஒரு விபத்து மீண்டும் ஏற்பட்டுள்ளது.

அந்த பெண் விபத்து ஏற்பட்ட சமயம் ஹெல்மெட் அணிந்தாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படும்போது சிறிய ஹெல்மெட் கூட உங்களை காப்பாற்றும். எப்போதும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டவேண்டும்.

இது இப்படி இருக்க ஓலா நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு மேலும் 100 ஷோவ்ரூம்களை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டுள்ளது. ஓலா ஸ்கூட்டர்களில் இருக்கும் சில பிரச்சனைகள் தொடர்ச்சியாக உள்ளன. அதில் இந்த முன்பக்க சஸ்பென்ஸன் ஒன்று. இதை ஓலா நிறுவனம் உடனடியாக கவனத்தில் எடுத்து சரிசெய்யவேண்டும்.

ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர் 3.97KWH பேட்டரி வசதி, 8500W பவர் மற்றும் 58NM டார்க் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 142 KM ரேஞ்சு மற்றும் 115 KMPH அதிகபட்ச வேகம் செல்லும். இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய 6.30 மணிநேரம் ஆகும்.

இந்த ஸ்கூட்டரில் பாதுகாப்பிற்காக CBS பிரேக்கிங், டிஸ்க் பிரேக், மோனோ ஷாக், அலாய் வீல், டியூப்லெஸ் டயர், TPMS போன்ற வசதிகள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் 1.50 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதைத்தவிர இந்த ஸ்கூட்டரில் ப்ளூடூத் வசதி, GPS நேவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், டோஸுஹ் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் ஸ்க்ரீன், மவுண்ட் கண்ட்ரோல், நோட்டிபிகேஷன் போன்ற வசதிகள் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.