இரவு தூங்கும் முன் ஒரு துண்டு தேங்காய் சாப்பிட்டால் போதும்! நன்மைகளோ ஏராளம்


தேங்காய் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட..!

அதிலும் இரவில் தூங்கும் முன் ஒரு துண்டு தேங்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது.

இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

தேங்காயில் இருக்கும் நல்ல கொழுப்பு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. அதோடு கொழுப்பு அளவையும் சீராக பராமரிக்க உதவுகிறது. இதனால் இதய பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் கொழுப்பு சத்து சீராக்கப்படுவதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

இரவு தூங்கும் முன் ஒரு துண்டு தேங்காய் சாப்பிட்டால் போதும்! நன்மைகளோ ஏராளம் | Health Cocunet Night Sleep

Jini Hera / Shutterstock/ David Prado/Stocksy United

சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக முகப்பருக்கள், தழும்புகள், முகச்சுருக்கம் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது.

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேங்காயை ஒரு துண்டு சாப்பிட்டால் அந்த ஒரு மணி நேரத்திற்குள் தூக்கம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதை முயற்சிக்கலாம்.

அதே போல இரவில் உறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக, தேங்காய்ப் பால் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

தேங்காயில் செலினியம் மற்றும் புரதச் சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இவை முடி உதிர்தல் மற்றும் முடியின் அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்பட விடாமல் தடுக்கிறது.

இரவு தூங்கும் முன் ஒரு துண்டு தேங்காய் சாப்பிட்டால் போதும்! நன்மைகளோ ஏராளம் | Health Cocunet Night Sleep

herzindagi



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.