போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஓரினச்சேர்க்கையை பாவம் என்று குற்றமாக்கும் சட்டங்களை விமர்சித்தார்.
ஓரினச்சேர்க்கை சட்டங்கள்
உலகமெங்கும் உள்ள 67 நாடுகள் அல்லது அதிகார வரம்புகள் ஒருமித்த ஒரே பாலின பாலியல் செயல்பாடுகளை குற்றமாக்குகின்றன.
குறிப்பாக அவற்றில் 11 நாடுகள் ஓரினச்சேர்க்கையை குற்றம் என்று கூறி மரண தண்டனை விதிக்கலாம் என்றும் கூறுகின்றன.
ஆனால், ஐக்கிய நாடுகள் சபையானது ஓரினச்சேர்க்கையை முழுவதுமாக குற்றமாக்கும் சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
தனியுரிமை மற்றும் பாகுபாட்டில் இருந்து சுதந்திரம் ஆகியவற்றுக்கான உரிமைகளை LGBTQ-க்கு எதிரான சட்டங்கள் மீறுவதாக கூறியது.
போப் பிரான்சிஸ் கருத்து
இந்த நிலையில் போப் பிரான்சிஸ், ஓரினச்சேர்க்கை ஒரு குற்றம் அல்ல என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவர் கூறுகையில், ‘ஓரினச்சேர்க்கையில் இருப்பது ஒரு குற்றமல்ல. கடவுள் தம்முடைய எல்லா குழந்தைகளையும் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே தான் நேசிக்கிறார்.
கத்தோலிக்க திருச்சபை அனைவரையும் வரவேற்க வேண்டும் மற்றும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற நம்பிக்கையுடன் ஒத்துப்போகிறது.
ஓரினச்சேர்க்கையைப் பொறுத்தவரை ஒரு குற்றத்திற்கு, பாவத்திற்கும் இடையில் வேறுபாடு இருக்க வேண்டும்.
தேவாலய போதனைகள் ஓரினச்சேர்க்கை செயல்கள் பாவம் அல்லது உள்ளார்ந்த ஒழுங்கற்றவை என்று கூறுகிறது, ஆனால் அவர்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும்.
இது ஒரு குற்றம் அல்ல. ஆம், ஆனால் அது ஒரு பாவம். நல்லது, ஆனால் முதலில் ஒரு பாவத்தையும், குற்றத்தையும் வேறுபடுத்திப் பார்ப்போம். ஒருவருக்கொருவர் தொண்டு செய்யாமல் இருப்பதும் பாவம்’ என தெரிவித்துள்ளார்.
@Vatican Media | Reuters
மேலும், ‘ஓரினச்சேர்க்கையாளர்கள் வரவேற்கப்பட வேண்டும் மற்றும் மதிக்கப்பட வேண்டும், ஓரங்கட்டப்படவோ அல்லது பாகுபாடு கட்டவோ கூடாது’ என்றும் கூறினார்.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டங்கள் நியாயமற்றது. கத்தோலிக்க திருச்சபையால் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதனை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கத்தோலிக்க திருச்சபை
போப்பின் கருத்துக்கள் திருநங்கைள் அல்லது Nonbinary மக்கள் ஆகியோரை குறிப்பிட்டு கூறவில்லை.
ஆனால், கத்தோலிக்க திருச்சபையில் அதிக LGBTQ சேர்க்கைக்கான ஆதரவாளர்கள் போப்பின் கருத்துக்களை ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று பாராட்டினர். போப் பிரான்சிஸின் இந்தக் கருத்துக்கள் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.