ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தனது குல தெய்வம் கோயிலான செண்பகத்தோப்பு வனப்பேச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘‘வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய வந்தேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எனது அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். 31-ம் தேதி தான் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. விரைவில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்” என்றார்.