சூர்யகுமார் யாதவுக்கு, ஐ.சி.சியின் 2022 சிறந்த T 20 கிரிக்கெட் விருது

2022 ஆம் ஆண்டின் சிறந்த T 20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருது ,இந்திய அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ்க்கு வழங்கப்பட்டுள்ளது.

வீரர் சூர்யகுமார் யாதவ் 2022 ஆம் ஆண்டில் 31 ரி 20 போட்டிகளில் விளையாடி 1164 ஓட்டங்கள் பெற்றுள்ளார். 46.56 சராசரி மற்றும் 187.46 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ஓட்டங்களை எடுத்துள்ளார். ஒரு ஆண்டில் ரி 20 சர்வதேச போட்டிகளில் இந்திய துடுப்பாட்ட வீரர் ஒருவர் 1000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தமை இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் 68 சிக்சர்களை அடித்துள்ளார். இவர் 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். மொத்தம் 45 ரி 20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3 சதங்களும் 13 அரை சதங்களும் உள்ளடங்கலாக 1578 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இதனால் ரி20 வரலாற்றிலேயே சிறப்பான சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.