தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் அளப்பரிய பங்களிப்பை போற்றும் விதமாக ஊர்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் விதமாக குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் ஊர்தி இடம்பெற்று இருந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் விதமாகவும், மகளிர் ஆற்றலை மையப்படுத்தியும் திராவிடக் கட்டடக்கலையின் உச்சத்தையும் சோழ மன்னர்களின் பெருமையையும் உலகறியும் வண்ணமும், டெல்லியில் இந்த ஆண்டு குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தி இடம்பெற்றது.

அவ்வை, வீரமங்கை வேலுநாச்சியார், இசைக்குயில்‌ எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரதநாட்டியப் பேரொளி பால சரஸ்வதி, சமூக சீர்திருத்தப் போராளிகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி, 107 வயது வாழும் விவசாயி பாப்பம்மாள் ஆகியோரின் உருவச்சிலையுடன் கம்பீரமாக சென்றது நமது ஊர்தி” இவ்வாறு அந்தப் பதிவில் முதல்வர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.