கள்ளக்குறிச்சி : தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில், 22 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்,
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று மாலை பள்ளி முடிந்து மாணவ, மாணவிகளுடன் சென்றுகொண்டிருந்து.
அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஏரியில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான இந்த சம்பவத்தில், ஓட்டுநர் உட்பட பேருந்தில் பயணம் செய்த 22 மாணவர்கள் காயமடைந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவியோடு போலீசார் விபத்தில் காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.