
உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர் என்ற மாவட்டத்தில், மகன் இறந்ததால் தனிமையில் இருந்த 28 வயது மருமகளை அவருடைய மாமனார் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சாபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, இவரது மூன்றாவது மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து கைலாஷ் யாதவ், தனியாக இருந்த தனது 28 வயது மருமகள் பூஜாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்திற்கு சிலர் ஆதரவாக இருந்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகனை இழந்த மருமகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர்.