சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என இபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தேர்தலாக இது அமையும். திண்டுக்கல் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி திருப்பு முனையை உருவாகியது போன்று ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். அந்த அளவுக்கு தான் மக்களின் மனநிலை உள்ளது. இந்தத் தேர்தல் தமிழகத்திற்கு ஒரு […]
