லடாக் சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரி கடும் குளிரில் சமூக ஆர்வலர் உண்ணாவிரதம்

லடாக்: பருவநிலை மாறுபாடு காரணமாக இமயமலைப் பகுதிகளில் பனிச் சிகரங்கள் உருகி, பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நேரத்தில் லடாக்கின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், குடியரசு தின நாளில் 5 நாட்கள் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.

கடல் மட்டத்தில் இருந்து 18,000 அடி உயரத்தில் கார்டங் லா பகுதியில் உறைய வைக்கும் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரில் அவர் உண்ணாவிரதம் இருக்கிறார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், “லடாக்கின் சுற்றுச் சூழலை பாதுகாக்க நாட்டு மக்களும் உலக மக்களும் உதவ முன்வர வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,‘‘அறிவியலோ, தொழில்நுட்பமோ பருவநிலை மாறுபாட்டின் விளைவுகளை சரி செய்ய முடியாது. இந்த நேரத்தில் இந்தியாவின் மலைகள், நதிகள், வனப்பகுதிகளை பாதுகாக்க நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.