அர்னால்டுக்கே சவால் விடும் முதல்வர்… சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ..!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு பணி சுமைகளுக்கு இடையே தனது உடல் நலத்தில் அக்கறை கொண்டு யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிள் பயணம் போன்றவற்றில் ஈடுபடுவது வழக்கம். 

முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களுடன் இணைந்து சைக்கிள் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் அப்பொழுது வெளியாகி வைரலாகும். இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவை பிரபல யூட்யூப் பக்கத்தில் “அர்னால்டுக்கே சவால் விடும் CM ஒர்க் அவுட்” என தலைப்பிட்டு பகிர்ந்தது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகியுள்ளது. அந்த வீடியோவில் முதல்வர் மு.க ஸ்டாலின் மேல் ஆடை இன்றி உடற்பயிற்சி செய்வதால் பலதரப்பட்ட மக்களும் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “மாண்புமிகு தலைவர் ஸ்டாலின் மிகவும் கண்டிப்பான உடற்தகுதி முறையைப் பின்பற்றுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் இந்த மார்ச் 1ம் தேதி 70 வயதை எட்டவுள்ளார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள!” எனக் குறிப்பிட்டு முதல்வர் மு.க ஸ்டாலினின் உடற்பயிற்சி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.