கேரளாவுக்கு சென்ற லாரி மீது பஸ் மோதல் சென்னை பெண் உள்பட 2 பேர் பரிதாப பலி: 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் நேற்று அதிகாலை சென்றபோது, பின்னால் சென்னையில் இருந்து மார்த்தாண்டம் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் அதிவேகமாக லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் இருந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஆண்டனிதாசன் (58), கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த கமலாபாய் (64) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பஸ் டிரைவர் சரவணன் உட்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடந்த சென்னை-திருச்சி நான்கு வழிச்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.