பட்ஜெட்டுக்கு பிறகு, இந்த 35 பொருட்களின் விலை அதிகரிக்கலாம்! தயாராகும் மோடி அரசு

Union Budget 2023: வரவிருக்கும் பட்ஜெட்டில் (Budget 2023) நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களுக்கு சுங்க வரி (Custom Duty)  உயர்த்தப்படலாம் எனத் தகவல். மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மேக் இன் இந்தியா (Make In India) பிரச்சாரத்திற்கும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவும் என எதிர் பார்க்கபடுகிறது. இந்தியாவில் இறக்குமதியைக் குறைப்பதற்காகவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும் 35 பொருட்களுக்கான சுங்க வரியை அதிகரிக்க மத்திய அரசாங்கம் தயாராகி வருகிறது. அதுக்குறித்து பார்ப்போம்.

சுங்க வரி அதிகரிக்கலாம்
ஒரு அறிக்கையின்படி, தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நகைகள், உயர்தர பளபளப்பான காகிதம் மற்றும் வைட்டமின்கள் போன்ற பொருட்களின் மீதான சுங்க வரியை அதிகரிக்க மத்திய அரசாங்கம் தயாராகி வருகிறது.

35 பொருட்களுக்கான சுங்க வரியை அதிகரிக்க முடிவு
பல்வேறு அமைச்சகங்களிடமிருந்து சுங்க வரி அதிகரிக்கப்படும் பொருட்களின் பட்டியலை அரசாங்கம் பெற்றுள்ளது. இந்த பட்டியல் மதிப்பாய்வு செய்யப்பட்டு, 35 பொருட்களுக்கான சுங்க வரியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. சுங்க வரியை உயர்த்துவதன் மூலம் இந்தியாவில் இந்தப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கப்படும். கடந்த டிசம்பர் மாதத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இறக்குமதி செயப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலை தயாரிக்குமாறு பல அமைச்சகங்களை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருக்கும் 
ஐஎம்எஃப் என அழைக்கப்படும் சர்வதேச நிதியம் உலகப் பொருளாதார தற்சமய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி மாதத்திற்கான அறிக்கையின்படி, 2023 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக குறையும் மற்றும் சர்வதேச பொருளாதாரம் தற்போதைய நிலையிலிருந்து 2.9 சதவீதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் பணவீக்கம் குறையும்
வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும். அதேபோல அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 5 சதவீதமாகக் குறையும். 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதமாகக் குறையும் என்றும் கணித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.