எனக்கு ஒரு அரை மணி நேரம் கொடுங்கள்; எப்படி பட்ஜெட் தயாரிப்பது என்பதை நான் காட்டுகிறேன்..!!

மத்திய பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது: இது மத்திய பட்ஜெட் எதிர்காலம் சார்ந்தது அல்ல, முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, மக்கள் விரோதமானது மற்றும் ஏழைகளுக்கு எதிரானது. இது ஒரு வகுப்பினருக்கு மட்டுமே பயனளிக்கும். நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு தீர்வு காண இந்த பட்ஜெட் உதவாது. 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. வருமான வரி வரம்புகளில் மாற்றங்கள் யாருக்கும் உதவாது. இந்த பட்ஜெட்டில் நம்பிக்கையின் கதிர் இல்லை. இது ஒரு இருண்ட பட்ஜெட். எனக்கு ஒரு அரை மணி நேரம் கொடுங்கள், ஏழைகளுக்கு எப்படி பட்ஜெட் தயாரிப்பது என்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவியுமான மெகபூபா முப்தி கூறியதாவது: ஒரு சில தொழிலதிபர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வரிகள் அதிகரித்து, நலத்திட்டங்களுக்கோ, மானியங்களுக்கோ பணம் செலவழிக்கப்படுவதில்லை. அவர்களின் குரோனி முதலாளிகளுக்கு வரிகள் குவிக்கப்படுகின்றன. விதிக்கப்பட்ட வரிகள் மக்களுக்கு பலனளித்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் முதுகை உடைத்துள்ளனர். மக்கள் பயன்பெறுவதற்கு பதிலாக, நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் அகற்றப்படுகின்றன. நாட்டில் வறுமைக் கோட்டிற்கு மேலே உயர்ந்தவர்கள் மீண்டும் கீழே விடும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்திலிருந்து எந்த நிவாரணமும் இல்லை. மாறாக இந்த பட்ஜெட் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். வேலையில்லா திண்டாட்டத்தை அகற்ற உறுதியான திட்டம் எதுவும் இல்லை. கல்விக்கான பட்ஜெட்டை 2.64 சதவீதத்திலிருந்து 2.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துக்கான பட்ஜெட் 2.22 சதவீதத்திலிருந்து 1.98 சதவீதமாக குறைப்பது தீங்கு விளைவிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.