
பெங்களூரு நகரில் பன்னார்கட்டா சாலையில் காகலிபுரா என்ற பகுதியில் 45 வயதான தாய் காயத்ரி தனது 15 வயதான மகள் சமந்தாவை நேற்று காலை தனது காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அப்போது காரின் எதிர்ப்புறம் மிக வேகமாக வந்த கான்கிரீட் கலவை லாரி கட்டுப்பாட்டை இழந்து காயத்ரி காரி மீது சாய்ந்தது.இந்த விபத்தில் கார் அம்பளம்போல் நொறுங்கிய நிலையில், காரில் இருந்த தாய் மற்றும் மகள் பரிதாபமாக உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பித்து ஓடிய நிலையில் 4 கிரேன் இயந்திரங்களை கொண்டு நான்கு மணி நேரப் போராட்டத்துக்கு பின் இருவரின் உடலை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். லாரி ஓட்டுனரின் அஜாக்கிரதையின் காரணமாக பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த மாணவி, தாயுடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.