புதுப்பொழிவு பெறுகிறது நாட்ரி டாம் தேவாலயம்:2024-ல் மீண்டும் திறக்க முடிவு| Renewed Notre Dame Cathedral: Plans to Reopen in 2024

பாரீஸ் : தீக்கிரையான பிரான்ஸ் நாட்டின் 800 ஆண்டுகள் பழமையான நாட்ரி டாம் தேவாலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து 2024-ல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணியர் பாரீசின் மத்திய பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாட்ரி டாம் தேவாலயத்திற்கு செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகளை ஈர்த்து வந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த தேவாலயம் 800 ஆண்டுகள் பழமையானது.

பாரீஸ் நகரின் அடையாள சின்னமாக விளங்கும் இந்த தேவாலயத்தின் மேற்கூரையில் கடந்த 2019-ல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தேவாலயம் உருக்குலைந்து போனது. பிரான்ஸ் மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இந்த தேவாலய மீண்டும் புதுப்பிக்க வேண்டி புனரமைப்பு பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் 2024-ல் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்க முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.