அணு ஆயுத சூட்கேசுடன் புடின்: உலகுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு காட்சி…


ரஷ்யாவில், வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய பாதுகாவலர்கள் இருவர், கையில் சூட்கேஸ்களுடன் காணப்பட்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுத சூட்கேசா?

ரஷ்ய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததான battle of Stalingrad என்னும் போரில் வெற்றி பெற்றதன் நினைவு நாள் விழாவில், இந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி புடின் கலந்துகொண்டார்.

Volgograd என்னுமிடத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர்க்கொத்துக்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார் புடின்.

அப்போது, அவருடனிருந்த பாதுகாவலர்கள் இருவர் தங்கள் கைகளில் சூட்கேஸ்கள் வைத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அணு ஆயுத சூட்கேசுடன் புடின்: உலகுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு காட்சி... | A Scene That Shocked The World

அதில் என்ன முக்கியத்துவம்?

புடினுடைய பாதுகாவலர்கள் கையில் சூட்கேஸ் வைத்திருப்பதில் என்ன முக்கியத்துவம் உள்ளது என பலரும் நினைக்கலாம்.

விடயம் என்னவென்றால், புடினுடன் எப்போதும் இருக்கும் ஒரு பாதுகாவலர் கையில் சூட்கேஸ் போல வைத்திருப்பது, மடித்து வைக்கப்பட்டுள்ள ஒரு பாதுகாப்புக் கவசமாம். யாராவது துப்பாக்கிச்சூடு நடத்தினால், புடினை பாதுகாப்பதற்காக அவரது பாதுகாவலர் ஒருவர் எப்போதும் தன் கையில் அதை வைத்திருப்பாராம்.

அணு ஆயுத சூட்கேசுடன் புடின்: உலகுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு காட்சி... | A Scene That Shocked The World

ரஷ்யாவின் அணு ஆயுதங்களை இயக்குவதற்கான பொத்தான் (launch button) ஒரு சூட்கேசில் வைக்கப்பட்டிருக்கும். அதை ஒரு பாதுகாவலர் எப்போதும் புடின் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் கூடவே சுமந்துவருவார். ஆகவே, புகைப்படத்தில் அந்த இரண்டாவது பாதுகாவலர் வைத்திருக்கும் சூட்கேஸ், அந்த அணு ஆயுத பொத்தான் கொண்ட சூட்கேஸ் என கருதப்படுகிறது.

இன்னொரு விடயம், இதே பாதுகாவலர்கள் இருவரும், உக்ரைன் போர் நேரத்திலும் புடினுடன் கூடவே காட்சியளித்துள்ளார்கள்.

இதற்கிடையில், உக்ரைன் ஊடுருவலின் முதலாம் ஆண்டு நினைவுநாளின்போது, ரஷ்யா உலகின் கவனத்தை ஈர்க்கும் ஒரு செயலை செய்ய இருப்பதாக எச்சரித்துள்ளது. இந்த நேரத்தில் அணு ஆயுத சூட்கேசுடன் புடின் காணப்படும் காட்சியும் வெளியாகியுள்ளது, அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.