அனைவரையும் சண்டைக்கு இழுக்கும் ஒன்றிய அரசு; அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது.

இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அதனால் தான் தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி ஏற்பு விழாவைக் கூட பிரதமர் நரேந்திரமோடி புறக்கணித்தார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தலைமை நீதிபதி பதவி ஏற்பில் பிரதமர் கலந்து கொள்ளாதது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், கடந்த கடந்த நவம்பரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலிஜியம் முறையை கடுமையாக விமர்சித்தார். கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைப்பதாகவும், இதேபோல், தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்துரைப்பதாகவும் விமர்சித்தார்.

இந்தநிலையில் அனைத்து தரப்பினருடன் ஒன்றிய பாஜக அரசு சண்டை போடுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து டெல்லி முதல்வர் கூறும்போது, ‘‘நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு போர் வெடித்துள்ளது.

மத்திய அரசு ஏன் எல்லோருடனும் சண்டை போடுகிறது? நீதிபதிகள், உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் வணிகர்களுடன்? எல்லோரிடமும் சண்டை போட்டுக்கொண்டு இருந்தால் நாடு முன்னேறாது. உங்கள் வேலையைச் செய்யுங்கள், மற்றவர்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும். அடுத்தவர் வேலையில் தலையிடாதீர்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கும் இடையே தொடக்கம் முதலே முட்டல் மோதலாக உள்ளது.

டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், எந்தவொரு திட்டத்திற்கும் ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த வகையில் ஆம் ஆத்மி அரசு அனுப்பும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா காலம் தாழ்த்தி வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

பிபிசி ஆவணப்படம்: சிக்கிய மத்திய அரசு… உச்ச நீதிமன்றம் அதிரடியாக செஞ்ச விஷயம்!

டெல்லி அரசு பள்ளி ஆசிரியர்களை, கல்வியில் முன்னனியில் விளங்கும் பின்லாந்திற்கு பயிற்சிக்கு அனுப்பும் திட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. டெல்லி முதல்வருக்கும், ஒன்றிய அரசின் பிரதிநிதியான ஆளுநருக்குமான இடையிலான மோதல் வெடித்துள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கருத்தை கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.