நியூடெல்லி: சமூக ஊடகஙக்ளில் பல முக்கியமான செய்திகள் வைரலானாலும், பிரபலங்கள் அதிலும் அமைச்சர் பகிரும் செய்திகலும் புகைப்படங்களும் வைரலாவது எப்போதும் நடப்பதில்லை. மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமையன்று பகிர்ந்த செய்தி, டிவிட்டரில் வைரலாகிறது. ஒரு படுக்கையில் வசதியாக படுத்திருக்கும் ஒரு குழந்தையின் புகைப்படத்தை ரயில்வே அமைச்சர் பகிர்ந்திருந்தார். அதற்கு நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ரயில்வே அமைச்சர் பகிர்ந்துகொண்டுள்ள புகைப்படத்தில், ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தை தனியாக இருக்கிறது. அந்தப் புகைப்படத்தை பகிர்ந்த ரயில்வே அமைச்சர், நெட்டிசன்களுக்கு புகைப்படத்துடன் ஒரு கேள்வியை முன்வைத்தார்.
ட்விட்டரில் படத்தைப் பகிரும் போது, “குழந்தை பயணிக்கிறது! இது விமானமா இல்லை ரயிலா? யூகிக்கவும்!” என்று அமைச்சர் பதிவிட்டிருந்தார். வைரலாகும் டிவிட்டர் செய்தி இது:
Baby On Board!
Plane seat or train seat?
Guess ⁉️ pic.twitter.com/x5snDfHADb— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 3, 2023
அவர் புகைப்படத்தைப் பகிர்ந்தவுடன், சில நிமிடங்களிலேயே நெட்டிசன்களை கவர, இதுவரை 1.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 32,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களுடன் மிகப்பெரிய அளவில் வைரலாகிறது.
இந்த டிவிட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள பயனர் ஒருவர், “மகிழ்ச்சியான படம்! ரயில்வேயில் மாற்றங்கள் நடைபெறுவது தெரியும், ஒவ்வொரு சாமானிய இந்தியனும் இதைப் பார்க்கிறார்கள்’ என்று எழுதியுள்ளார். ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் அடிக்கடி இரயில்வேயில் நடக்கும் முன்னேற்றங்களைப் பற்றி டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.
அவரை பின்தொடர்பவர்கள், அவர் ரயில்களுக்குள் இருந்து பகிரும் பிரமிக்க வைக்கும் புகைப்படங்களைப் பார்த்து அதை பகிர்ந்து வைரலாக்குகின்றனர். மலைகளால் சூழப்பட்ட பனி மூடிய ரயில் நிலையத்தின் பல படங்களை வெளியிட்டார் மற்றும் அதை அடையாளம் காணுமாறு நெட்டிசன்களிடம் கேட்டார். அந்தப் படங்களில், பனி மூடிய நிலப்பரப்பில் ஒரு ரயில் நகர்வது தெரிந்தது.
ரயில்வேயை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது தொடர்பாக மக்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்களை தெரிவித்து வருகிறார்.