உங்க கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இதனை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்


பொதுாவாக நம்மில் பலருக்கு முகம் பார்ப்பதற்கு ஒரு நிறமும், கைகள் மற்றும் கால்கள் பார்ப்பதற்கு வேறு நிறமும் போன்று காட்சியளிக்கும்.

அதிலும் வெயில் மற்றும் சுற்றுப்புற மாசு காரணமாக அதிக பாதிக்கப்படும் உடல் பாகத்தில் முக்கியமானவை நம் பாதங்கள்

.

இந்த கருமையை போக்க, பெண்கள் விலையுயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் வீட்டு வைத்தியம் மூலம், செலவில்லாமல் கை, பாதங்களின் பளபளப்பை மீட்க முடியும்.

தற்போது அவற்றை இங்கே பார்ப்போம்.  

உங்க கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இதனை போக்க இதோ சூப்பர் டிப்ஸ் | Are Your Feet Discolored Or Black

  • ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் சிகைக்காய் பவுடர், 200 மில்லி பால் மற்றும் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களைச் சேர்த்து கால்களை 15 முதல் 20 நிமிடம் வரை ஊற வைக்கவும். பால் சருமத்தை மிருதுவாக்கி இயற்கையாக கருமையை போக்குகிறது.
  •  2 ஸ்பூன் திரிபலா சூரணம், மஞ்சள், கடலை மாவு ஆகியவற்றை ரோஸ் வாட்டருடன் கலந்து  போன்ற பதத்தில் கருமை நிறமுள்ள கால் பகுதிகளில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரை வைத்து ஒரு காட்டன் துணியில் துடைத்து எடுக்கவும். இதை செய்வதன் மூலம் பளிச் என்ற அழகிய கால்களை பெறலாம்.
  •  படுக்க செல்வதற்கு முன் இதனை கால்களில் தடவி, கால்களுக்கு லேசான மசாஜ் செய்வது மூலம், கால்களுக்கு நல்ல ரிலாக்ஸ் கிடைப்பது மட்டுமல்லாமல், கால்களில் உள்ள கருமையை போக்கும்.
  • 1 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பேஸ்டுடன் ஒரு ஸ்பூன் கடல் உப்பை சேர்த்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கால்களின் சருமத்தில் ஸ்க்ரப் செய்யவும். இந்த வழிமுறை இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. மேலும் இது சருமத்தை பிரகாசமாகவும், தெளிவாகவும் மாற்றுகிறது.
  • ஒரு கப் பழுத்த பப்பாளியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரு கால்களிலும் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கால்களை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த வழிமுறையை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • ஒரு கப் வாழைப்பழ துண்டுகளுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் பால் அல்லது பால் ஏடு சேர்த்து பிசைந்து கொள்ளவும். அந்த பேஸ்டை கால்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து துடைத்து எடுத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.