உறைய வைக்கும் – 46 டிகிரி வெப்ப நிலை.. அமெரிக்காவை உலுக்கும் குளிர் வெடிப்பு..!

ஒர்சஸ்டர், மாசசூட்ஸ்: அமெரிக்காவில் கடும் குளிர் வெடிப்பு காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆர்க்டிக் கண்டத்தில் ஏற்பட்ட பெரும் குளிர் வெடிப்புதான் தற்போது அமெரிக்காவை உறைய வைத்து வருகிறது.

அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு வெப்ப நிலை மிகவும் குறைந்து விட்டது. நியூஹாம்ப்ஷயர் உள்ளிட்ட பல நகரங்களில் வெப்ப நிலை -79 செல்சியஸ் என்ற அளவுக்கு இறங்கி விட்டது.

நியூயார்க், மாசசூசட்ஸ், கனக்டிகட், ரோட் ஐலான்ட், நியு ஹாம்ப்ஷயர், வெர்மான்ட், மெய்ன் ஆகிய மாகாணங்களில் கடும் பாதிப்பை மக்கள் சந்தித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கிட்டத்தட்ட 10.6 லட்சம் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சீன பலூன்: அமெரிக்க வான் எல்லைக்குள் 2வது பலூன் நுழைந்ததால் பரபரப்பு

இருப்பினும் இந்த கடும் குளிர் விரைவில் சரியாகும் என்று தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த உறைய வைக்கும் கடும் குளிருக்கு சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மக்கள் வெளியே வரவே முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதால், பாஸ்டன், ஒர்சஸ்ட் ஆகிய நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இங்கு அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. குளிரிலிருந்து தப்பும் வார்ம் மையங்களும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன. பாஸ்டன் மேயர் மிச்சல் வூ இதுகுறித்துக் கூறுகையில், மக்கள் இந்த மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை தவறுகளையும், தோல்விகளையும் திருத்திக் கொள்ள வேண்டும் .. ரணில் விக்கிரமசிங்கே

இதற்கிடையே, பசிபிக் புயல் ஒன்று அடுத்து மிகப் பெரிய குளிர் வெடிப்பை ஏற்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கலிபோர்னியவின் சியர்ரா நெவாடா மலைகளில் மையம் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மலையின் அடிவாரப் பகுதிகள், வடக்கு, மத்திய கலிபோர்னியா, பசிபிக் வட மேற்குப் பகுதிகளில் கடும் குளிர் நிலவுமாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.