எடப்பாடி முதல்வர் ஆவதற்கு பாஜக தேவை; ஓபிஎஸ் அணி புகழேந்தி உறுதி.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் நேற்று செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேசமயம் இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணையும் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

“ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளரை பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்யுங்கள். பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரையும் அனுமதிக்க வேண்டும்.

அவைத் தலைவர் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும். பொதுக்குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.அவைத் தலைவரின் பரிந்துரை மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்” என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழன்சாமி தரப்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது ஓபிஎஸ் அணிக்கு சாதகமான தீர்ப்பு என கூறப்படுகிறது.

இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் (ஓபிஎஸ் அணி) புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொருத்தவரை, உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் அணியுடன் கலந்து வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே தமிழ் மகன் உசேன் இந்த விஷயத்தில் நியாயமாக செயல்பட்டு வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசை கண்டித்து ஆவின் ஊழியர்கள் உண்ணாவிரதம்!

உச்சநீதிமன்ற ஆணையை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். பாரதிய ஜனதாவை பொருத்தவரை எடப்பாடி முதலமைச்சர் ஆவதற்கு அவர்களது உதவி வேண்டும். இப்போது அவர்களுடைய ஆலோசனை எங்களுக்கு தேவை இல்லை என பொன்னையன் போன்றோர் சொல்வது சரியானது அல்ல. அப்படி என்றால் ஏன் உச்ச நீதிமன்ற வரை சென்றிருக்க வேண்டும்.

எனவே இந்த தேர்தலில் அவர்களது யோசனையையும் கேட்கத்தான் வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலில் தவழ்ந்து வந்து ஆட்சியை பிடித்தார். அதனால் எடப்பாடி பழனிச்சாமி பேசிய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும், ஓ பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டாலும், நான் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எனக்கு தன்மானம் உள்ளது. திமுக அரசு பேனாவை வைத்து தான் கருணாநிதியை அடையாளபடுத்த வேண்டிய அவசியம் இல்லை’’ என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.