என்னதான் பெண் விடுதலை, பெண் குழந்தைகள், பாதுகாப்பு பெண்களின் முன்னேற்றம் என்று பக்கம் பக்கமாக பலரும் மேடையில் பேசினாலும் இன்றளவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றது.
பெண் குழந்தை பிறந்தாலே குடும்பத்தினர் சோகத்தை இழக்கும் நிகழ்ச்சியும் குழந்தை பெண் என்ற காரணத்தால் கொல்லப்படும் நிகழ்வும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், ஒரு நபர் பெண் குழந்தையை கழிவுநீர் தொட்டியில் வீசிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மதுரை அரசு மகப்பேறு மருத்துவமனை பிரிவில் பெண் சிசு ஒன்று கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கழிவுநீர் தொட்டியில் பெண் குழந்தையை தூக்கி வீசி கொன்றது யார் என்று போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.