‛கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்| The central government approved the appointment of 5 judges recommended by the collegium

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ‘ ‘கொலீஜியம்’ பரிந்துரைத்த உச்ச நீதிமன்றத்துக்கான ஐந்து நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சேர்த்து, 34 நீதிபதிகளுடன் செயல்பட வேண்டிய உச்ச நீதிமன்றத்தில் தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.

latest tamil news

இதையடுத்து, புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான, ‘கொலீஜியம்’ கடந்த ஆண்டு டிச., 13ல் பங்கஜ் மிட்டல், பாட்னா , சஞ்சய் கரோல், பி.வி.சஞ்சய் குமார், அசானுதீன் அமானுல்லா, மனோஜ் மிஸ்ரா 5 நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த நியமனங்களுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ஜனாதிபதியின் கையெழுத்திற்கு பின் விரைவில் அறிக்கை வெளியாக உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.