
புற்றுநோய் இன்று உலகையே அச்சுறுத்திவரும் மிக முக்கியமான லைஃப்ஸ்டைல் நோய். தொற்றா நோய்களில் இதுவே அதிகமான உயிர்களைக் காவு வாங்கி வருகிறது. ஆண்டுதோறும் உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

புற்றுநோய் குறித்த அச்சம், தவறான எண்ணங்களையும் மூடநம்பிக்கைக்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவற்றில் முக்கியமான 10 நம்பிக்கைகள் பற்றி பார்ப்போம்.

மருத்துவ ரீதியாக இது உண்மை இல்லை. மார்பகப் புற்றுநோய் பாதிப்பாளர்களில் ஒரு சதவிகிதத்தினர் ஆண்கள்.

இது உண்மை இல்லை. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், வாழ்வியல்முறை மாற்றம் மற்றும் தகுந்த சிகிச்சைகள் மூலம் குணப்பட்டுத்திவிட முடியும்.

எந்தப் புற்றுநோயும் தொற்றும் தன்மை உடையது அல்ல. ஆனால், தொற்றும் தன்மையுடைய வைரஸ்களான ஹெச்பிவி, ஹெபடைட்டிஸ் சி ஆகியவை முறையே செர்விக்கல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்துமளவு தீவிரமானவை.

இது உண்மைதான். புற்றுநோய் குணமாக நேர்மறையான எண்ணங்கள், அணுகுமுறைகள் மிகவும் முக்கியம். ஆனால், தொடர் மருத்துவ சிகிச்சைகளும், வாழ்வியல்முறை மாற்றங்களும் இதே அளவு முக்கியமானவை.

புகைப் பழக்கம், பேஸிவ் ஸ்மோக்கிங் இரண்டும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். இதனோடு, ஆஸ்பெஸ்டாஸ், ரேடான், ஆர்சானிக் வாயு போன்றவையும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.

இது மிகவும் தவறான கருத்து. லைட்ஸ் சிகரெட் ஆபத்தற்றது என்ற மனப்பாங்கு நிறைய சிகரெட்டுகளை ஊதித்தள்ள தூண்டுகின்றன. இதனால், புற்றுநோய்க்கான வாய்ப்பு இரண்டு மடங்காகிறது. புகை பிடிப்பதை முழுமையாகக் கைவிடுவது ஒன்றே புற்றுநோய் வராமல் காக்கும் வழி.

தவறான கருத்து. சிகரெட், புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுவது, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், போதுமான ஓய்வு, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் மாசிலிருந்து தற்காத்துக்கொள்ளுதல் போன்ற முறையான வாழ்வியல் பழக்கங்களை மேற்கொள்வதால், புற்றுநோய் வருவதற்கான ரிஸ்க்கை தடுக்க முடியும்.

இது முழுக்க முழுக்க மருத்துவத்துக்குப் புறம்பான மூடநம்பிக்கை. புற்றுநோய் முற்றி, உடல் முழுதும் பரவத் தொடங்கிவிட்ட நிலையில், சிலருக்கு அறுவைசிகிச்சை செய்வதால், சிகிச்சையையும் மீறி புற்றுநோய்க் கட்டிகள் உடலெங்கும் பரவும். அதிலிருந்து இந்த மூட நம்பிக்கை உருப்பெற்றிருக்க வேண்டும்.

புற்றுநோய் என்பது மனிதன் உருவாக்கிக்கொண்ட நோய். செயற்கையான வேதிப்பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் மனிதன் தேடிக்கொண்டது இந்த நோய்.

ஆனால், இயற்கையான சில பொருள்களில்கூட புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென்கள் உள்ளன. உதாரணமாக, டீ, காபி, கோக் போன்றவற்றில் உள்ள டேனின் என்ற பொருள், புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜெனாக செயல்படக்கூடியது.

இல்லை. உடலில் கொழுப்புக்கட்டிகள் உட்பட தீங்கற்ற பல கட்டிகள் உருவாகக்கூடும். அனைத்துமே புற்றுக்கட்டிகளாக இருக்கும் என்றோ, எல்லா கட்டிகளும் புற்றுநோயைக் கொண்டுவரும் என்றோ தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.
நலம் பெறுவோம்!