முதியோர் உதவித்தொகை வழங்குவதில் மாற்றம்… அமைச்சர் அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்:

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீடு வீடாக சென்று திண்ணையில் அமர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் பல்வேறு நிபந்தனைகள் விதித்து நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகை மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

மின்னல் வேகத்தில் சிலம்பம் சுற்றி மாணவர்களை கவர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ்…!

திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றோம். இந்த ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த ஆட்சியின் திட்டங்களும், முதலமைச்சரின் பணிகளும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏறத்தாழ 400 கோடி ரூபாய் மதிப்பில் ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாநகராட்சியில் எந்த பகுதிக்கு சென்றாலும் மழை நீர் வடிகால் பகுதி, பாதாள சாக்கடை விரிவாக்க பணி என ஏராளமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால் சாலைகள் கூட சில இடங்களில் சேதம் அடைந்திருக்கின்றன. பாதாள சாக்கடையும் புதிய மழைநீர் வடிகால் பணியும் முடிவுற்றால் மீண்டும் அந்த சாலைகள் புதுப்பித்து தரப்படும் என்றார். மேலும் அந்தப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அந்த பணிகளும் செய்யப்படும் என்றும், ஈரோடு மாநகராட்சி ஒரு மிகச்சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்த முதலமைச்சர் 400 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.

ஆதரவற்ற முதியோர் உதவித்தொகை:

அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர்.

குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்ற ஒரு விதியை கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் ஏழரை லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உரியவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். ஆண் வாரிசு இருந்தாலும், ஆதரவற்றவர்களாக இருந்தால் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், நிறுத்தப்பட்டவர்களுக்கு அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கருங்கல்பாளையம் பகுதியில் பழமையான கிணறால் பல்வேறு பிரச்சனை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து கருத்து கூற முடியாது.

எனினும் தேர்தல் முடிந்தவுடன் அமைச்சர் முத்துசாமி உடன் கலந்து ஆலோசித்து இப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, பொதுமக்கள் முடிவின்படி கிணறை சீரமைப்பதா அல்லது கிணத்தை நிரந்தரமாக மூடுவதா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார். இந்த வாக்கு சேகரிக்கும் பணியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் அர்விந்த் ரமேஷ், காரம்பாக்கம் கணபதி, பிரபாகர் ராஜா, மற்றும் சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.