மும்பை: மும்பை நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று இ மெயில் மூலம் தலிபான் பெயரில் வந்துள்ள மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேசிய புலனாய்வு அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ள இ.மெயிலில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மும்பை நகரில் உஷார் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசியபுலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வு க்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து நேற்று இ மெயில் ஒன்று வந்தது. அந்த இமெயிலை அனுப்பிய மர்ம நபர் தான் தலிபான் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை போலீசார் நேற்று உறுதி செய்தனர். மிரட்டல் இ-மெயில் தகவலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த மிரட்டலை தொடர்ந்து மும்பை மட்டுமல்ல மகாராஷ்டிராவின் பல்வேறு நகரங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மிரட்டல் இ-மெயில் குறித்து மும்பை போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் கூட்டாக தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.