Samantha: 30 கிலோ புடவை… 3 கோடி ரூபாய் மதிப்பில் நகை… சகுந்தலம் படத்திற்காக ரிஸ்க் எடுத்த சமந்தா!

சகுந்தலம் படத்திற்காக நடிகை சமந்தா 30 கிலோ எடை கொண்ட புடவை மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் அணிந்து நடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தாதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடைசியாக அவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் யசோதா ஆகிய திரைப்படங்கள் வெளியாயின. இந்த இரண்டு படங்களிலும் சமந்தாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து பாலிவுட் படங்கள் மற்றும் ஹாலிவுட் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். ​ Reshma Pasupuleti: ப்பா… இவ்ளோ அழகா இருந்தா எப்படி? புடவையில் கிறங்க வைக்கும் பாக்கியலட்சுமி ராதிகா!​
சகுந்தலம்இதனிடையே சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படம் வரும் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புராண கால கதையை மைய்யப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் தேவ் மோகன், பிரகாஷ் ராஜ், மோகன் பாபு, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
​ Samantha: என்னலாமோ நடந்துருச்சு… தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொள்ளும் சமந்தா.. கலங்கும் ரசிகர்கள்!​
30 கிலோ சேலைஇப்படத்தில் தேவ் மோகன் புரு ராஜ வம்சத்தின் அரசர் துஷ்யந்தாக நடித்துள்ளார். நடிகை சமந்தா ராணி சகுந்தலாவாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக நடிகை சமந்தா ரிஸ்க் எடுத்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தப் படத்தில் புராதண கால ராணியாக நடித்துள்ள சமந்தா, உயர் ரக கற்கள் பதியப்பட்ட 30 கிலோ எடை கொண்ட சேலையை அணிந்து நடித்துள்ளாராம்.
​ Barathi Kannamma: முடிவுக்கு வந்த பாரதிகண்ணம்மா… கண்ணீருடன் ஃபேர்வெல் கொண்டாடிய சீரியல் டீம்!​
3 கோடி ரூபாய் நகைஇவ்வளவு எடை கொண்ட சேலையை சுமார் ஒரு வாரம் அணிந்து நடித்தாராம் நடிகை சமந்தா. மேலும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளையும் உண்மையாகவே அணிந்து நடித்தாராம் நடிகை சமந்தா. ஏற்கனவே மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, இவ்வளவு எடை கொண்ட சேலையையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டு கச்சிதமாக தனது கதாப்பாத்திரத்தில் நடிக்க ரொம்பவே சிரமப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ​ இதுக்கெல்லாம் அடங்குற ஆளா நயன்தாரா!​
ரசிகர்கள் ஆர்வம்இந்த தகவல்களை அறிந்த சமந்தாவின் ரசிகர்கள், சகுந்தலத்தில் சமந்தாவின் நடிப்புத் திறனைக் காண ஆர்வமுடன் உள்ளனர் குறிப்பாக தேவ் மோகனுடன் அவரது கெமிஸ்ட்ரி மற்றும் ரொமான்ஸ் எப்படி இருக்கும் என்பதையும் காண ஆர்வமாக உள்ளனர் ரசிகர்கள். ராணி சகுந்தலா கதாப்பாத்திரத்திற்கு நடிகை சமந்தா பர்ஃபெக்ட்டாக பொருந்தியிருப்பார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். நடிகை சமந்தா அரிய வகை தசை அழற்சி நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
​ AK 62: ஏகே 62… டைரக்டர் மட்டுமில்ல…. மியூஸிக் டைரக்டரையும் தூக்கியடித்த அஜித்?​
அடுத்து குஷிஇதற்காக நடிகை சமந்தா அமெரிக்காவில் சிகிச்சை பெற்று விட்டு அண்மையில்தான் நாடு திரும்பினார். சிகிச்சை முடிந்து வந்த வேகத்தில் தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. சகுந்தலம் படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
​ Lokesh Kanagaraj, Magizh Thirumeni: மகிழ் திருமேனியை அட்ட காப்பியடித்த லோகேஷ்? வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!​
Samantha

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.