இனி மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் : ம.பி. முதல்வர் அறிவிப்பு..!

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போபால் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

மாநிலத்தில் பெண்கள் எளிமையாக வாழ்க்கையை நடத்தி செல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதனால், இதற்கு முன்னர் உள்ள திட்டங்களுடன் தற்போது இந்த லட்லி பெஹ்னா யோஜனா திட்டமும், பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என தெரிவித்தார்.

அதன்படி, மத்திய பிரதேச மாநில ஏழை மகளிருக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என சவுகான் அறிவித்து உள்ளார். வருகிற மார்ச் 8-ம்தேதி சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறும் நடைமுறை தொடங்கும்.

இந்த திட்டத்தின் கீழ் பெறும் தொகையை கொண்டு, அவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். வேறு மாநிலங்களில் நடைபெறாத விஷயங்கள் மத்திய பிரதேசத்தில் நடைபெறுகின்றன. யாரும் செய்யாத விசயங்களை நான் செய்வேன்.

மாநிலத்தில் 83 லட்சம் பேர் முக்கிய மந்திரி ஜனசேவா அபியான் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் அரசு திட்டங்களை பலன் பெற தகுதியானவர்கள். 38 வெவ்வேறு திட்டங்களின் பலனை பெறுவதற்காக இந்த குடிமக்கள் அனைவருக்கும் ஒப்புதல் கடிதங்கள் வினியோகிக்கும் பணிகள் மாநிலத்தில் நடந்து வருகின்றன என அவர் தெரிவித்தார். இதில், விடுபட்ட மக்களுக்காக விகாஸ் யாத்ரா என்ற பெயரிலான திட்டமும் இன்று (பிப்ரவரி 5 முதல்) தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.