இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

தக்கலை செய்கு பீர்முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானபுகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆண்டு விழா தக்கலை அஞ்சுவன்னம் பீர் முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆண்டு விழா இன்று (பிப். 6) நடைபெறுகிறது. மேலும் இவ்விழாவுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இதனை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தக்கலை செய்கு பீர்முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (பிப். 6) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

06.02.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக 2023 மார்ச் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (11.03.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தக்கலை செய்கு பீர் முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881(Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 06.02.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.