பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதியாக இருந்தவர் பர்வேஸ் முஷரஃப். இவர் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை கவிழ்த்து ராணுவ ஆட்சியை கொண்டு வந்தவர். பாகிஸ்தான் அதிபராக 2008ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதையடுத்து பதவி விலகி விட்டு துபாய் சென்று அங்கேயே செட்டில் ஆனார். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இவருக்கு வயது 78. பர்வேஸ் முஷரஃப் மறைவில் பல்வேறு நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
