சாதியை உருவாக்கியது யார்.? – ஆர்எஸ்எஸ் தலைவர் பரபரப்பு கருத்து.!

இந்து மத கோட்பாடான சனாதன தர்மத்தை தமிழநாட்டின் முக்கிய அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் மற்றும் பெரியார் அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. மனு தர்மம், சனாதன தர்மம் உள்ளிட்ட கருத்துக்களை விசிகவின் தலைவர் தொல்
திருமாவளவன்
கடுமையாக எதிர்த்து வருகிறார்.

சனாதன கருத்துக்கள் தான் நாட்டின் ஆதிகுடிகளை சாதி ரீதியாக பிளவு படுத்துவதாக விசிக தலைவரும், தந்தை பெரியாரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதனால் தான் சாதியத்தை பேணுவதாக கூறப்பட்ட மனுதர்மம் உள்ளிட்ட நூல்களை பெரியார் கொளுத்தினார். அதேபோல் மனுதர்மத்தில் கூறப்பட்ட சக மனிதர்களுக்கு எதிரான வாதங்களை பொதுமக்களுக்கு தெரியபடுத்த திருமாவளவன் அதை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

இந்தநிலையில் கடவுள் மனிதர்களை பிளவுபடுத்தவில்லை, பூசாரிகள் தான் பிளவுபடுத்தினார்கள் என வலது இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். புனித சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரவீந்திர நாட்டிய மந்திர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட மோகவன் பகவத் பேசும்போது அவர் இதை கூறியுள்ளார்.

‘‘நாட்டில் மனசாட்சி மற்றும் உணர்வு அனைத்தும் ஒன்றுதான், கருத்துக்கள் மட்டுமே வேறுபடுகின்றன.

நாம் வாழ்வாதாரம் சம்பாதிக்கும்போது, சமூகத்தின் மீது நமக்கும் பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு வேலையும் சமுதாயத்தின் சிறந்த நன்மைக்காக இருக்கும்போது, எந்த வேலையும் எப்படி பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது வித்தியாசமாகவோ இருக்கும்?

நம்மை படைத்தவருக்கு, நாம் சமம், ஜாதி அல்லது பிரிவு இல்லை. இந்த வேறுபாடுகள் நமது பூசாரிகளால் உருவாக்கப்பட்டன, அது தவறு. துளசிதாஸ், கபீர் மற்றும் சூர்தாஸ் ஆகியோரை விட புனித ரோஹிதாஸ் மதிப்பு மிக்கவர். அதனால்தான் அவர் புனித சிரோமணி என்று கருதப்படுகிறார். சாஸ்திரத்தில் அவர் பிராமணர்களை வெல்ல முடியாவிட்டாலும், பல தரப்பட்ட மனிதர்களின் இதயங்களைத் தொட்டு, அவர்களைக் கடவுள் நம்பிக்கை கொள்ளச் செய்தவர்.

உங்கள் வேலையைச் செய்யுங்கள், உங்கள் மதத்தின்படி செய்யுங்கள். சமூகத்தை ஒன்றிணைத்து அதன் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள், அதுதான் மதம். இது போன்ற எண்ணங்கள் மற்றும் உயர்ந்த இலட்சியங்களால்தான் பல பெரிய மனிதர்களை புனித ரோஹிதாஸின் சீடர்களாக மாறியது.

ஐந்து நீதிபதிகள் நியமனம்; உச்சநீதிமன்றத்திடம் பணிந்த ஒன்றிய அரசு.!

சத்தியம், இரக்கம், அகத்தூய்மை மற்றும் தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் முயற்சி ஆகிய நான்கு மந்திரங்களை புனித ரோஹிதாஸ் சமூகத்திற்கு வழங்கினார். உங்களைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள், ஆனால் எந்த சூழ்நிலையிலும் உங்களை மதத்தை விட்டுவிடாதீர்கள். மதச் செய்திகளை வெளிப்படுத்தும் விதம் வேறுபட்டாலும், செய்திகள் ஒன்றே ஒன்றுதான். ஒருவர் தனது மதத்தைப் பின்பற்ற வேண்டும். மற்ற மதங்களுக்கு தீங்கிழைக்காமல்,” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.