திருமண நாளில் மரணத்தை தழுவிய வாணி ஜெயராம்! உடல் தகனம் செய்யப்பட்டது


மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

வாணி ஜெயராம்

தமிழ் சினிமாவின் மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்.
இவர் வாணி ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.

எந்த மொழியில் பாடல் பாடினாலும், அந்த மொழியின் தொன்மையை உணர்ந்து, அதன் அர்த்தம் மாறாமல் பாடுவதில் வல்லவர்.

நேற்று (04/02/2023) அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்.

திருமண நாளில் மரணத்தை தழுவிய வாணி ஜெயராம்! உடல் தகனம் செய்யப்பட்டது | Vani Jayaram Last Ride Singer

உடல் தகனம்

இந்த நிலையில் தான் அவர்களின் திருமணம் நடந்த அதே பிப்ரவரி 4-ம் நாள் வாணியின் உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் இன்று (05/02/2023) பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் காவல் துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துவதை காண முடிந்தது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.