பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் காலமானார்.

நீண்ட காலமாக கடுமையான உடல்நலக்குறைவுக்குப் பிறகு, பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவத் தளபதியுமான பர்வேஸ் முஷாரப், ஐக்கிய அரபு அமீரகத்தன் துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 79.

அவரது உடல் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை, இருப்பினும் அவரது குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு கொண்டு வர கடந்த ஆண்டு முதல் முயற்சி செய்து வருகின்றனர்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார் | Pakistan Ex President Pervez Musharraf Dies Dubai

அரிய நோயால் காலமானார்

அமிலாய்டோசிஸ் என்ற நோயால் முஷாரப்பின் உறுப்புகள் செயலிழந்தன. இந்த நோய் இணைப்பு திசுக்கள் மற்றும் உறுப்புகளை பாதித்து, இயல்பான செயல்பாட்டைத் தடுக்கிறது. இது உடல் முழுவதும் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களில் அமிலாய்டு எனப்படும் அசாதாரண புரதத்தின் உருவாக்கத்தால் ஏற்படும் ஒரு அரிய நோயாகும்.

2007-ல் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், முஷாரப் கடந்த 8 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார். அவர் தனது “வாழ்நாள் முழுவதையும்” தனது சொந்த நாட்டில் கழிக்க விரும்பினார், மேலும் விரைவில் பாகிஸ்தானுக்குத் திரும்ப விரும்பினார்.

டெல்லியில் பிறந்தார்

1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரப். தேச பிரிவினையின் போது முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது.

1964-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார். நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து 1999-ல் அதிகாரத்தை கைப்பற்றினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.