தன் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த நண்பனை சராசரியாக வெட்டிய கணவன் தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் சேர்ந்தவர் செந்தில். இவர் எகிப்து நாட்டில் பணிபுரிந்து வருகிறார். மாதம் ஒன்றை லட்சம் ரூபாய் சம்பாதித்து வரும் செந்தில், அவ்வப்போது சொந்த ஊருக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில், செந்தில் நண்பரான கிருபாகரனுக்கும், செந்தில் என் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் செந்திலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை எடுத்து கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு எகிப்து நாட்டின் வேலையை விட்டுவிட்டு செந்தில் தன் சொந்த ஊருக்கே திரும்பி உள்ளார்.
மேலும் இந்த கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு, மனைவி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கிருபாகரன் வீட்டுக்கு சென்ற செந்தில், என் வாழ்க்கையை நாசமாக்கியதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, செந்தில் தான் மறைத்து வைத்திருந்த அருவாளால் கிருபாகரனை சராசரியாக வெட்டினார்.
தற்போது கிருபாகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், செந்தில் அவரின் வீட்டு தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்டுக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பழிக்குப் பழி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.