ஸ்டாலின் கையில் கிடைச்ச ரிப்போர்ட்; லீக்கான 5 விஷயங்கள்- ஈரோடு கிழக்கில் அனல்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், எடப்பாடி அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, ஓபிஎஸ் அதிமுக சார்பில் செந்தில் முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் உள்ளிட்டோர் களத்தில் நிற்கின்றனர்.

திமுக vs அதிமுகஇதில் திமுக, அதிமுக இடையில் தான் பிரதான போட்டியாக பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்காக கூட்டணி கட்சி தலைவர்கள் மிகத் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால் அதிமுகவில் உட்கட்சி பூசலால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் வேட்பாளர்களை நிறுத்த இரட்டை இலை யாருக்கு என்பது சிக்கலாகி நிற்கிறது.
ஸ்டாலின் அசைன்மென்ட்இந்நிலையில் தங்களுக்கான வெற்றி வாய்ப்பு, எதிர்க்கட்சிகளின் பலம் குறித்து அறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் சீக்ரெட் அசைன்மென்ட் ஒன்றை கொடுத்தார். அதன்மூலம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே போட்டியிட்டால் எவ்வாறு வாக்குகளை பெறுவர்? இரட்டை இலை சின்னத்துடன் போட்டியிட்டால் எப்படி வாக்குகள் விழும்? போன்ற விஷயங்கள் பற்றி சர்வே நடத்தப்பட்டுள்ளது.
​​
உளவுத்துறை சீக்ரெட்இதுதவிர ஈரோடு கிழக்கு தொகுதி நிலவரம் குறித்த தகவல்களை சேகரித்து உளவுத்துறையும் கோட்டைக்கு தகவல் அனுப்பியுள்ளது. இந்த ரிப்போர்ட்டில் ஐந்து முக்கியமான விஷயங்கள் தெரியவந்துள்ளன. (1)அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் என பிரிந்து போட்டியிட்டால் திமுக கூட்டணிக்கு எளிதில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். (2)ஒருவேளை இரட்டை இலை சின்னத்துடன் களமிறங்கினால் இந்த இடைத்தேர்தல் சற்று சவாலாக இருக்கும்.
ஸ்வீட் பாக்ஸ் வியூகம்(3)எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என்பதால் எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தனது இமேஜ் சரியக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். (4)வெற்றிக்காக ஸ்வீட் பாக்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான வேலைகளையும் செய்ய தயாராக இருக்கிறார். தற்போது அதற்கான முன்னோட்டம் தொடங்கியுள்ளது.
திமுக கூட்டணி(5)ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் பெரிதாக பிரச்சாரம் செய்வதில்லை. ஓரிரு நாட்கள் மட்டும் வந்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். திமுக அமைச்சர்கள் தான் முழு மூச்சாக தேர்தல் வேலைகளை செய்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் அட்வைஸ்இதைக் கண்டதும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சில முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுங்கள். இது வெறும் இடைத்தேர்தலாக மட்டும் பார்க்காதீர்கள். அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்க வேண்டும்.

இமாலய வெற்றிஅதிமுகவை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பின்னோக்கி தள்ள வேண்டும். இதன்மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு திமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கும் சரியான அடியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மேலும் அனல் பறக்க தொடங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.