AK62: AK62 பஞ்சாயத்து…வசமாக சிக்கிக்கொண்ட அஜித்..கொஞ்சம் கஷ்டம் தான் போலயே..!

அஜித் நடிப்பில் வினோத்தின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் தற்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித் மற்றும் லைக்காவிற்கு பிடிக்காததால் AK62 படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் விக்னேஷ் சிவன். இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கிட்டத்தட்ட இந்த தகவல் உறுதியாகியுள்ளது.

TP Gajendran: நேற்று வாணி ஜெயராம்..இன்று TP கஜேந்திரன்..அடுத்தடுத்த மரணங்கள்..அதிர்ச்சியில் திரையுலகம்..!

இந்நிலையில் AK62 திரைப்படத்தை விஷ்ணுவர்தன் அல்லது மகிழ் திருமேனி ஆகியோரில் ஒருவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மகிழ் திருமேனி தான் AK62 படத்தின் இயக்குனர் என்பது உறுதியாகியுள்ளது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

தடையற தாக்க, தடம் என தரமான ஆக்ஷன் கலந்த திரில்லர் படங்களை இயக்கி ரசிகர்களை ஈர்த்த மகிழ் திருமேனி தான் அஜித்தை இயக்க சரியான இயக்குனர் என இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒருபக்கம் மகிழ் திருமேனி தான் சரியான இயக்குனர் என அவரை பாராட்டி பலர் கருத்து தெரிவிக்க சிலர் எதிர்மறையான கருத்துக்களையும் கூறி வருகின்றனர். அதாவது மகிழ் திருமேனி ஒரு படத்தை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இயக்குவார்.

மேலும் ஒரே காட்சியை பலமுறை எடுத்து நடிகர்களை சலிப்படைய செய்வார். இவ்வாறு இருக்கையில் அஜித் போன்ற ஒரு உச்ச நட்சத்திரங்கள் இதனை பொறுத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே என சிலர் குறைகூறி வருகின்றனர். இருப்பினும் மகிழ் திருமேனி இயக்கும் படம் தரமாக தான் இருக்கும் என்பது பொதுவான கருத்தாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.