TP Gajendran Death:நண்பன் டி.பி. கஜேந்திரன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

TP Gajendran: இயக்குநர் டி.பி. கஜேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

டிபி கஜேந்திரன்பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய டி.பி. கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருந்து வந்த கஜேந்திரன் பல படங்களில் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். டி.பி. கஜேந்திரனின் மறைவு குறித்து அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்டாலின்சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் வீட்டில் டி.பி. கஜேந்திரனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலிகிராமத்திற்கு சென்று கஜேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கஜேந்திரனும், ஸ்டாலின் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள். அதில் இருந்து இத்தனை ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரங்கல்மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர் என்றார்.
கவலைஇரங்கல் செய்தியில் மு.க. ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன். தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இழப்புமுதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவின் அக்கா சாருமதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். குடும்பத்தில் ஒருவரை இழந்த சில மணிநேரத்தில் நண்பர் கஜேந்திரனை இழந்துவிட்டார் முதல்வர். இது குறித்து அறிந்த சினிமா ரசிகர்களும், கட்சியினரும் ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

வாணி ஜெயராம்Vani Jairam:வாணி ஜெயராம் திடீர் மரணம்: பணிப்பெண் சொன்னது இது தான்நடிகர்கள் ராதாரவி, மனோபாலா ஆகியோர் கஜேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். குடும்ப கதைகளை கஜேந்திரனை போன்று இயக்க யாராலும் முடியாது என்று கூறி கண் கலங்கினார் மனோபாலா. நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் டி.பி. கஜேந்திரன். நல்ல நண்பர் என தெரிவித்தார் ராதாரவி. நேற்று வாணி ஜெயராம், இன்று கஜேந்திரன் என அடுத்தடுத்து இழப்புகளாக இருக்கிறதே என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.