அட சீ கருமம் கருமம்… பெண்ணை பழிவாங்க.. கடத்தி கொலை செய்து சடலத்துடன் உடலுறவு கொண்ட 16 வயது சிறுவன்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள கைலாஷ்புரி கிராமத்தில் கடந்த 1-ம் தேதி அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்ட போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, எங்களுக்கு கடந்த 1-ம் தேதி காலையில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், கட்டப்பட்டு வரும் வீட்டில் ஒரு சடலம் கிடப்பதாக கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தோம். அங்கு, ஒரு பெண்மணியின் உடல் நிர்வாணமாக காயங்களுடன் இருந்துள்ளது.

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். மறுபுறம் சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டோம். விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே நாங்கள் குழம்பிபோய் இருந்தோம். அப்போதுதான் எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது இந்த சம்பவத்தையடுத்து இதே கிராமத்திலிருந்து சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளார். எங்களது சந்தேகம் அந்த சிறுவன் மீது விழுந்தது. ஆனால் இந்த சிறுவன் இப்படி ஒரு கொலையை செய்வதற்கான வாய்ப்பு கிடையாது என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் சிறுவனின் போட்டோவை உயிரிழந்த பெண்மணியின் குடும்பத்தினரிடம் காட்டியபோது எங்களது கணிப்பு தவறு என்பதை உணர்ந்தோம்.

அதாவது இந்த சிறுவனின் குடும்பம் உயிரிழந்த பெண்மணியின் வீட்டை விட்டு கொஞ்சம் தூரத்தில்தான் வசித்து வந்துள்ளது. இவர்கள் மிகவும் ஏழ்மையில் இருந்துள்ளனர். இவர் வீட்டில் டிவி கிடையாது. எனவே டிவி பார்ப்பதற்காக சிறுவன் இந்த பெண்மணியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் இப்பெண்மணியின் வீட்டிலிருந்து செல்போன் ஒன்று காணாமல் போயுள்ளது. எனவே இந்த சிறுவன் மீது பழி விழுந்துள்ளது. சிறுவன் இதனை மறுத்துள்ளான். ஆனால் சிறுவனை இப்பெண்மணி கடுமையான வார்த்தைகளால் பேசி இனி வீட்டிற்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.

இது கைலாஷ்புரி கிராமம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. எனவே அனைவரும் சிறுவனை கேலி செய்திருக்கிறார்கள். இதனால் சிறுவன் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளான். அப்போதிலிருந்து இந்த பெண்மணியை பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்திருக்கிறான். இப்படி இருக்கையில் காணாமல் போன சிறுவனை நாங்கள் நேற்று கண்டுபிடித்தோம். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் உண்மையை அவன் ஒப்புக்கொண்டான்.

அதாவது, கடந்த 30-ம் தேதி இரவு இந்த பெண்மணியின் கணவரும், மகனும் வெளியே சென்றிருக்கின்றனர். இதனை அறிந்த சிறுவன் அதிரடியாக வீட்டினுள் புகுந்து பெண்மணியை கடத்த முயன்றிருக்கிறான். அவர் சத்தம் போடவே உடனே மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக்கை எடுத்து அவர் வாயில் திணித்து அவரது கைகள் இரண்டையும் கட்டி போட்டிருக்கிறார். இதனால் அப்பெண்மணியால் தப்பிக்க முடியவில்லை.

வீட்டிலிருந்து பெண்மணியை அருகில் இருந்த கட்டுமான பணிகள் நடைபெற்றுகொண்டிருந்த கட்டிடத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து அரிவாள் கொண்டு பெண்மணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பெண்மணியின் தலையிலும், பிறப்புறுப்பிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து பெண்மணி மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். பின்னர் அப்பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன், அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று பக்கத்து நகரத்தில் பதுங்கியுள்ளான் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.